ஆனால் இவர் கடந்த ஜூலை மாதம் (14.07.2017 ) வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அரசாங்கத்தை விட்டு தாம் விலகப் போவதாக தபால் பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை பூர்த்தியானதன் பின்னர், தமது பிரதி அமைச்சர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 17 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக சேவையாற்றவே தாம் நல்லாட்சி அராசங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் எனினும் இதுவரையில் அவ்வாறான ஓர் பணியை செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.