இலங்கையை மீண்டும் யுத்த களமாக மாற்ற வேண்டாம்" லக்ஸ்மன் கிரியெல்ல

புதிய அரசியலமைப்பே நல்லிணக்கத்தை உருவாக்கும் புதிய ஆரம்பமாகும். புதிய அரசியல் அமைப்பினை தடுக்க குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடவிட வேண்டாமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

முதல் தடவையாக தமிழர் தலைமைகள் அரசியல் அமைப்பினை விருப்புடன் ஆதரித்து வருகின்றனர். இந்த வாய்ப்பினை நழுவவிடக்கூடாது, இதைவிட நல்லதொரு வாய்ப்பு இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியல் அமைப்பில் பிரதான விடயங்களில் குழப்பங்கள் இருப்பதாக மாநாயக தேரர்கள் மத்தியில் பொது எதிரணியினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் நேற்று மீண்டும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அஸ்கிரிய மாநாயக தேரர்களை சந்தித்து தெளிவுபடுத்திய நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். (வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -