பாடசாலையில் முதலிடம் பெற்று சாதனை

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ல்முனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்.) மாணவி செல்வி அப்துல் ஹமீட் பாத்திமா சாபியா இவ்வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலையில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

இவரின் திறமையை அதிபர் யூ.எல்.எம். நஸார் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் பாராட்டியதோடு, கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இம்மாணவி, அப்துல் ஹமீட்(சபீக்) மற்றும் அபூபக்கர் றிஸ்வானா தம்பதிகளின் இளைய புதல்வியாவார்.

இப் பாடசாலையில் இந்த மாணவியோடு சேர்த்து 12 மாணவர்கள் புலமைப்பரிசில் சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -