கிழக்குமாகாண ஆசிரியர்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் மாகாண அமைச்சர் நசீர் கல்வி அமைச்சில்

காரியாலய செய்தியாளர்-


வெளி மாவட்டத்தில் ஆசிரிய நியமனம் பெற்றுள்ள கிழக்குமாகாண கல்வியல் கல்லூரி முடித்த ஆசிரியர்களின் அவல நிலை தொடர்பில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் தெளபீக் ஆகீயோர் இன்று காலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினை சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர்.

குறித்த சந்திப்பில் கிழக்கில் 3000 க்கு மேற்பட்ட ஆசிரியர் ஆளணித்தட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளிமாகாணத்தில் நியமித்தல் சாத்தியமற்றது என்ற கோரிக்கையுடன் கடந்த இரு வருடங்களும் இதே நிலை காணப்பட்டு முன்னாள் முதலமைச்சர் இதனை குறித்த மாகாணத்துக்கே மீளப்பெற்றதனையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் முன்னாள் சுகாதார மாகாண அமைச்சர் நசீர் ஆகியோரிடம் ஆசிரியர்களை மாகாணத்துக்கு நியமித்தல் தொடர்பில் இன்னும் சில நாட்கள் அவகாசம் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க பேச்சுவார்த்தையினை இடைநிறுத்தி திரும்பியுள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை இம்போட்மிரர் தொடர்பு கொண்டு கேட்டபோது :

குறித்த ஆசிரியர்களின் பிரச்சனை தொடர்பாக விரிவாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் எடுத்துக்கூறியிருக்கிறோம். அவரும் சிறந்த முடிவினை எடுக்க சில நாட்கள் அவகாசம் தாருங்கள் என்று சிறந்த முறையில் எங்களுடன் உரையாடினார்.

எனவே கிழக்கு மாகாண ஆசிரியர்களை மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கே கொண்டு வரும் நடவடிக்கையினை தொடர்ந்தும் செய்து வருகிறோம் நிச்சயம் வெற்றி கிடைக்கும் சற்று பொறுமையாக இருக்குமாறு குறித்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -