சடலம் ஒன்றை வைத்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்..



க.கிஷாந்தன்-

லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் மலைத்தோட்ட மக்கள் 24.10.2017 அன்று மதியம் சடலம் ஒன்றை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த மலைத்தோட்டத்தில் வசிக்கும் ஆர்.லெட்சுமன் (வயது – 40) என்ற நபர் கடந்த 22ம் திகதி கிரெட்வெஸ்டன் பகுதியில் ரயில் பாதையில் சென்ற பொழுது கால் இடறி விழுந்துள்ளார்.

உடனடியாக இவரை பொது மக்கள் பலர் தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தோட்ட வைத்திய அதிகாரி உரிய நேரத்தில் வருகை தந்து சிகிச்சையை மேற்கொள்ளாத பட்சத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை தோட்டத்தில் அம்புலன்ஸ் வண்டி இருந்தும் இவரை மேலதிக சிகிச்சைக்காக உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலையை காணப்பட்டதாலும், இவர் உயிரிழந்திருப்பதாக தோட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெத்துள்ளனர்.

தோட்டத்தில் உள்ள 500ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதுடன், இவர்கள் தோட்ட நிர்வாகத்திற்கும் தோட்ட வைத்தியருக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை அடக்கம் செய்யும் 24.10.2017 அன்றைய தினத்தில் தோட்ட நிர்வாகத்தினதும், தோட்ட வைத்தியரினதும் அசமந்த போக்கினை கண்டித்து உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.

இதனையடுத்து சடலத்தை மக்கள் அடக்கம் செய்தனர். ஆனால் தோட்ட வைத்திய சேவையில் அசமந்த போக்கினாலேயே இவர் உயிரிழக்கப்பட்டார் எனவும், உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் இவரை நம்பியிருக்கும் குடும்பத்தினர் நடுதெருவுக்கு வந்திருக்க மாட்டார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்திய தோட்ட மக்கள் உடனடியாக அரசியல்வாதிகள், சுகாதார அமைச்சு என சம்மந்தப்பட்டவர்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியை முன்வைத்த பின்பே சடலம் அத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -