முஸ்லிம் பெண்ணை காப்பாற்ற போராடிய சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள்

முஸ்லிம் கர்ப்பிணி பெண் ஒருவரை இரு சிங்கள பொலிஸ் அதிகாரிகள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காந்தளாய் மணிக்கூட்டு கோபுர சந்தி வீதிக்கு நடுவில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. சாரதியினால் முக்கச்சர வண்டியை இயக்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி நின்ற இடம் கொழும்பு திருகோணமலை பிரதான வீதி என்பதனால், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குழந்தை ஒன்றை பிரசவிக்கும் நிலையில் முஸ்லிம் தாய் ஒருவரை அவதானித்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வீதியில் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டியை நிறுத்தி அந்த பெண்ணை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அரை மணித்தியாலங்களில் அந்த இடத்திற்கு வந்த பெண்ணின் கணவர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வணங்கி நன்றி தெரிவித்துள்ளார்.

தனக்கு மகன் பிறந்துள்ளதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவி செய்திருக்கவில்லை என்றால் ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு வழி ஏற்படுத்திய கந்தளாய் பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை பலர் பாராட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -