பைஷல் இஸ்மாயில் -
அக்கரைப்பற்று 13 ஆம் பிரிவு பழைய சினிமா வீதியின் 2 ஆம் குறுக்கு உள்ளக வீதியில் வசிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவாகவும், தாகமாகவும் இருந்து வந்த குறுக்கு வீதிக்கு 5 மில்லியன் ரூபா நிதியில் கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி. அன்வர்டீனினால் நேற்று மாலை (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக சேவையாளரும், தொழிலதிபருமாகிய எம்.எம்.தமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் கலந்துகொண்டு குறித்த விதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இதன்போது இப்பிரிவில் வசிக்கும் மக்களினால் மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீனுக்கு பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்தனர்.