ரத்னதீப தேச அபிமான்ய விருது வழங்கி கௌரவிப்பு




அஸீம் கிலாப்தீன்-

மூக சேவையாளர் எம்.ஏ.எம். ஸப்ரின், ரத்னதீப தேச அபிமான்ய சமூக சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மலையக, கலை கலாச்சார அமைப்பு மற்றும் என்.பி.சி வானொலி வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் இந்த விழாவில் ஸப்ரினுக்கு இந்த விஷேட விருது வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 23வருட அரச சேவை அனுபவங்களை கொண்ட இவர் தற்போது கைத்தொழில் வர்த்தக அமைச்சில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக பணிபுரிகின்றார். இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களம், வெளிநாட்டு அமைச்சு பிரான்சில் உள்ள இலங்கை தூதராலயம், மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றவர்.

அகில இலங்கை சமாதான நீதவானான இவர், நீதியமைச்சின் அங்கிகரிக்கப்பட்ட மும்மொழி மொழி பெயர்ப்பாளர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் அபுசாலி மற்றும் சுல்பிஹா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -