ஆர்ப்பாட்டத்தினால் அட்டனில் பதற்ற நிலை - கடையும் சேதம்





க.கிஷாந்தன்-

ட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என போடப்பட்டிருந்த பெயர் பலகை இரு தினங்களுக்கு முன் அகற்றப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், விவசாயதுறை அமைச்சர் ரமேஷ்வரன், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் அட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மீண்டும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இந்த நிலையம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியை மறித்து வீதியில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி இடம்பெற்றது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் நகரில் நெரிசல் நிலையும் காணப்பட்டன.

ஆர்ப்பாட்டம் மற்றும் பட்டாசு வெடிகள் காரணமாக நகரில் பதற்ற நிலை ஏற்பட்டன.

26.10.2017 அன்று காலை முன்னெடுக்கபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையகத்தில் பல பாகங்களிலிருந்து பொது மகக்ள் வருகை தந்தமை குறிப்பிடதக்கது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் தொழிற்பயிற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாக 1998ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பயிற்சி நிலையத்தை 2000ம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் ஊடாக திறந்து வைக்கப்பட்டது.

மறந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவரால் ஜேர்மனி நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மூலமாக தொண்டமான் தொழற்பயிற்சி நிலையம் என அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி அமைக்கப்பட்ட இந்த தொழிற்பயிற்சி நிலையம் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின் ஆறுமுகன் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் இன்றைய நல்லாட்சி அரசாங்க காலம் வரை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இயங்கி வரும் இந்த நிலையம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்பாட்டகாரர்கள் தாக்கியதில் அட்டன் நகரில் கடையொன்று சேதமடைந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் பலகை மீண்டும் அமைக்கும் வரை மலையகத்தின் நகரங்களிலும், தோட்டங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் என மேலும் தெரிவத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -