கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்றோர் விபரம்

ன்று (24.10.2017) கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டி பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்,

மொத்தமாக 3009 பேர் விண்ணப்பித்த அம்பாறை மாவட்டத்தில் 1296 பட்டதாரிகள் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.

மொத்தமாக 1521 பேர் விண்ணப்பித்த திருகோணமலை மாவட்டத்தில் 576 பட்டதாரிகள் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.

மொத்தமாக 2350 பேர் விண்ணப்பித்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 996 பட்டதாரிகள் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.

ஆகமொத்தம் 2868 பேர் மூன்று மாவட்டங்களிலும் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.

முள்ளிப்பொத்தானையை சேர்ந்த Raseethkhan, I. மூன்று மாவட்டங்களிலும் Aptitude இல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதேபோல அக்கரைப்பற்றை சேர்ந்த Iraseswary, K. General Knowledge இல் மூன்று மாவட்டங்களிலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதேபோல Raseethkhan, I. திருகோணமலை மாவட்டத்தில் அதிக மொத்தப் புள்ளிகளையும், தனன்முனையை சேர்ந்த manojini.M மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மொத்தப் புள்ளிகளையும், அதேபோல அக்கரைப்பற்றை சேர்ந்த Iraseswary அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய மொத்தப் புள்ளிகளையும் பெற்றுள்ளனர். அவர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்.

31.07.2017 ஆம் திகதிய தினகரன் பத்திரிகையின் விளம்பரம் மற்றும் கிழக்கு மாகாண சபையின் இணையத்தள விபரங்கள் எதிலும் குறைந்தபட்ச புள்ளிகள் எத்தனை என்பது கூறப்படவில்லை ஆயினும் பொதுவான ஆசிரியர் போட்டிப் பரீட்சைகளுக்கான சுற்றறிக்கையின் படி இரண்டு பாடங்களிலும் குறைந்தது நாற்பது புள்ளிகளே வெட்டுப்புள்ளிகளாகும். ஆயினும், இதுபற்றி தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லை. அந்த முடிவை மாகாண சபை எடுக்கும்.

அதுபோல பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் நாற்பதுக்கு மேல் எடுத்த பட்டதாரிகள் எல்லோருக்கும் ஆசிரியர் நியமனம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை. நிரப்ப வேண்டிய 1440 வெற்றிடங்களுக்கு (பாடங்கள் வெவ்வேறு ஆயினும்) 2868 பேர் மூன்று மாவட்டங்களிலும் நாற்பதுக்கு மேல் புள்ளிகள் எடுத்ததால் பலர் நேர்முகப்பரீட்சையில் (சிலவேளை மேலதிக 1428 பேரும்) வாய்ப்புக்களை இழக்க நேரிடலாம். இது வெட்டுப்புள்ளிகளின் இறுதி முடிவில் தங்கியுள்ளது.

அதேவேளை நீங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு தேவையை விட குறைவானவர்களே சித்தி அடைந்திருந்தால் உங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.

எது எவ்வாறாயினும் நாளை நீங்கள் மாகாண சபையின் கல்விபிரிவினை தொடர்பு கொண்டு வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வினாக்களை எழுப்ப முடியும். அவர்கள் இறுதித் தீர்மானங்களை எடுக்காத பட்சத்தில் நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும்.

நீங்கள் இரண்டு பாடங்களிலும் கணிசமான புள்ளிகளை பெற்றிருந்தால் இனி உங்கள் பாடத்தை அடிப்படையாக்கொண்டு நேர்முகப்பரீட்சைக்கு தயாராகுங்கள். இந்த வாய்ப்பினை நழுவவிடுவது மிகவும் துரதிஸ்டவசமானது.

• அதற்காக நீங்கள் விண்ணப்பித்த பாடத்தின் பாடசாலை பாடநூல்களை வாசியுங்கள்.

• அந்தப்பாடங்களை பாடசாலைகளில் தற்போது கற்பித்துக்கொடுக்கும் ஆசிரியர்களிடம் அந்தந்த பாடங்கள் பற்றி விரிவாக அறிந்துகொள்ளுங்கள்.

• இணையத்தளங்களில் Presentation Methods, Teaching techniques பற்றி வாசித்து உங்களை புடம் போடுங்கள்.

• இதற்குமுன் ஆசிரிய நியமனம் பெற்றவர்களிடம் நேர்முகப்பரீட்சைக்கான பயிற்சிகளை பெறுங்கள்.

• உங்கள் பட்ட சான்றிதழ்/கடிதம் மற்றும் நீங்கள் எடுத்த பாடங்கள் தொடர்பான Transcript என்பவற்றை உங்கள் பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்று, நேர்முகப்பரீட்சைக்கான ஆவணங்களை கோப்பிலிடுங்கள்.

உங்கள் ஆசிரிய நியமனத்துக்காக என்றும் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் தயவுசெய்து உங்கள் மனதினை நொந்து கொள்ள வேண்டாம். போட்டிப் பரீட்சை தொடர்பான அனுபவமொன்றை பெற்றிருப்பீர்கள். அந்த அனுபவங்களைக்கொண்டு அடுத்தடுத்த போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகுங்கள் இறைவன் உங்கள் முயற்சிகளை பொருந்திக்கொள்வானாக. அடுத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நீங்கள் தயாராவதோடு, போட்டிப் பரீட்சைகளுக்கும் உங்களை தயார்படுத்தி மிக விரைவில் நீங்களும் தொழில்வாய்பொன்றைப் பெற வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன். கவலைப்பட வேண்டாம். காலமும், வாய்ப்புகளும் விரைவில் கனியும். அதுவரை பொறுமையாக முயற்சி செய்யுங்கள்.

என்றும் அன்புடன்,
எப்.எச்.ஏ. ஷிப்லி
shiblyfh@seu.ac.lk

பரீட்சை முடிவுகள் இங்கே...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -