க.கிஷாந்தன்-
வெலிமடை திமுத்துகம பகுதியில் வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி வைத்திருந்த லொறி ஒன்றினை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.
இந்தச் சம்பவம் வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை திமுத்துகம கிராம பகுதியில் 21.10.2017 அன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதிகாலை வேளையில் லொறி எரியும் வெளிச்சத்தினைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அயல்வர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதிலும், லொறி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
இதே வேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.