பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ளது - கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டம்



க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மேலும் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ளது.

இப்பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் இங்கு வாழ்கின்ற இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை எதிர்த்து கினிகத்தேனை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று 31.10.2017 அன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

மலையக முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கினிகத்தேனை நகரில் முன்னெடுப்பதற்கு அட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு ஒன்று பிறபிக்கப்பட்டிருந்தது. நகரில் வாகனங்களுக்கு இடையூறு இடம்பெறாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமலும் ஆர்ப்பாட்டத்தை முனனெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பிறபிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டது. இதில் சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

அம்பகமுவ பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள மேலும் இரண்டு பிரதேச சபைகளுக்கு எல்லைகள் பிரிக்கப்படும் போது இதுவரை இப்பகுதியில் வாழ்ந்து வரும் இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்பட்ட இடம் இருப்பதாகவும், சிவனொளிபாதமலை ஆலயம் தமிழர் பிரதேசத்திற்கு செல்லும் நிலை உருவாகுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

மலையகத்து தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கை அவர்களின் கலாச்சாரம் கல்வி ஆகியவற்றை உயர்த்தியவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர் அன்று பெற்றுக்கொடுத்த பிராஜா உரிமையின் அடிப்படையில் இன்று நுவரெலியா மாவட்டத்தில் சில பிரதேச சபை பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்திற்கு தமிழ் பிரதிநிதிகள் அதிகமாக செல்லக்கூடிய வாய்ப்பு அமைந்தது.

அம்பகமுவ பிரதேச சபை மூவின மக்களையும் இணைத்த பிரதேசமாகும். இங்கு தமிழர்கள், சிங்களவர்கள், மூஸ்லீம்கள் ஒற்றுமையுடனும் உறவுகளை வளர்த்து வாழ்ந்து வருகின்றனர். அம்பகமுவ பிரதேசத்தை உள்ளடக்கப்பட்ட பகுதிகளை கொண்டு ஓர் பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் மலையக தமிழ் தலைவர்களான அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் பெரியசாமி சந்திரசேகரன் உள்ளிட்ட அன்றைய கால அனுபவமிக்க தலைவர்களுடன் ஒரு மேசையில் அமர்ந்து கலந்துரையாடி உருவாக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை வேறுபாடுகளை கலைத்து இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் மலையகத்தை சார்ந்த தமிழ் அமைச்சரான திகாம்பரம் அவரின் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் மற்றும் கொழும்பில் இருக்கின்ற மனோ கணேசன் ஆகியோர் இப்பகுதிக்கு மேலும் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரி இப்பகுதி மக்களை பிளவுப்படுத்துவதுடன், சமய கலாச்சார விழுமியங்களையும் பாதிக்கும் வகையில் இனங்களுக்கு இடையில் முறுகல் ஏற்படும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அதிகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று ரொசல்ல, வட்டவளை, கினிகத்தேனை போன்ற பகுதியில் அதிகளவிலான சிங்களவர்களுடன் தமிழ் மக்களும் மூஸ்லீம் மக்களும் சமாதானத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு சிவனொளிபாதமலையை பௌத்தர்களிடமிருந்து பிளவுப்படுத்த பிரதேச எல்லைகளை பிரிக்கின்றது. இதனால் பாரிய இன்னல்களுக்கு இங்குள்ள மக்கள் முகங்கொடுக்க நேரிடும்.


எனவே அவ்வாறு பிரித்தால் அம்பகமுவ பிரதேசத்திற்கு உட்பட்ட பிரதேசமாக சிவனொளிபாதமலையும் உள்ளடங்கப்பட்ட வகையில் எல்லைகளை பிரிக்க வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றம் செல்லவும் தயாராக இருப்பதாக அவர் தனது கருத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடும் வகையிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -