புதிய அரசமைப்பு விவகாரம் நாட்டில் தற்போது பேசப்படும் பிரதான கருப்பொருளாக உள்ளமையால் அவரின் நாடாளுமன்ற வரவு சமூகத்தினர் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் சில பங்காளிக் கட்சிகள் யோசனை முன்வைத்துள்ளன.
இந்த யோசனைக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இணக்கம் வெளியிட்டுள்ளது எனவும், அதற்காக தமது பதவியை இராஜிநாமா செய்ய இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்மதித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
நாடாளுமன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது நாளை முதல் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. ஆனால், மேற்படி விவாதத்தை நிறுத்தும்படியும், புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் முயற்சி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் நாட்டின் முக்கிய பௌத்தபீடத்தினரும், மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் புதிய அரசமைப்பு தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதன் நிமித்தமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்று அறியமுடிகின்றது.