முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் திருத்தம் கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமைகள் தொடர்பில் மக்களுக்கு தௌிவூட்டும்கூட்டம் நாளை ஏறாவூரில் இடம்பெறவுள்ளது.
நாளை (28.10.2017) முற்பகல் 10 மணியளவில் ஏறாவூர்அல் முனீரா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மேலதிகத் தேர்தல்கள்ஆணையாளர் எம் எம் மொஹமட் கலந்து கொண்டு தேர்தல் முறைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்,
அத்துடன் இதன் போது எதிர்வரும் தேர்தல்களின் போது பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் முறைமை மற்றும் வட்டார ரீதியான வாக்களிப்புமுறைமை குறித்து இதன் போது விளக்கமளிக்கப்படவுள்ளது.
எல்லை நிர்ணயத்தின் பின்னரான தேர்தல் முறைமை மாற்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் இதன் போது விரிவுரைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -