பிரதி அமைச்சர் ஹரீஸ் நேரில் சென்று ஸாஹிரக் கல்லூரி சாதனை மாணவனை வாழ்த்தி பரிசளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை ஸாஹிரக் கல்லூரிக்கு இன்று (2) திங்கட்கிழமை நேரில் சென்று குறித்த கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச மட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை மாணவன் ஏ.எம். முகம்மட் சௌபத்தை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜகார்த்தா நகரிலுள்ள மேர்கு வுயானா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4 வது சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கும் போட்டி நிகழ்வில் கல்முனை ஸாஹிரக் கல்லூரி உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த மேற்குறித்த மாணவன் சூரிய சக்தியினால் இயங்கும் விசுறும் இயந்திரத்தை காட்சிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அம்மாணவனை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேரில் சென்று வாழ்த்தினார்.

தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள குறித்த மாணவன் எதிர்காலத்தில் தனது முயற்சியினை விரிவான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இப்பாடசாலை பக்க பலமாக இருந்து அவரை ஒரு சிறந்த விஞ்ஞானியாக திகழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய பிரார்த்திப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.

மேலும் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸினால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது பாடசாலை அதிபர் எம்.எஸ் முகம்மட், பொறியியல் தொழில்நுட்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ. ஆதம்பாவா, கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பிரதி அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -