ஹஸ்பர் ஏ ஹலீம்-
2017 கல்வியியல் கல்லூரியை முடித்து ஆசிரியர் நியமணத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் நியமணம் பெற்றவர்களை கிழக்கு மாகானத்திற்குள் உள்வாங்குமாறு
அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசியத்தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சருமான ரிஸாத்பதுர்தீன் அவர்களூடாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்ளிடம் நேற்று(24) காலை(10மணி முதல் 1 மணிவரை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து பேசியதற்கினங்க
ஆசிரியர்களது கஸ்டத்தை உணர்ந்த கல்வியமைச்சர் அவர்களை அன்மையிலுள்ள பாடசாலைகளுக்குள் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாதாக வாக்குறுதியளித்ததாக முன்னாள் கிண்ணியா நகர சபை தலைவரும் தற்போதைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான சட்டத்தரணி டாக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.இதன்போது எழுத்து மூலமான மஹஜர் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் முன்வைத்தே தங்களது கிழக்குமாகாண ஆசிரியர் நியமனங்கள் பற்றி விரிவாக அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும் மேலும் தெரிவித்தார்.