ஆதம்பாவா அஸ்வர் நண்பர்கள் வட்டம் ஒரு தொகுதி காலணிகளையும் சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ். வித்தியாலயத்துக்கு அவசராமாக தேவைப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் வழங்கியிருந்தது. காலணிகளை மாணவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வும் குறித்த நண்பர்கள் வட்டத்தால் சேகரிக்கப்பட்ட பொருட்களை பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வும் 2017-10-02 ஆம் திகதியன்று அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனைப் பிராந்திய கல்வி அதிகாரி எம்.எஸ்.எம்.ஜலீலும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரகுமான் மற்றும் விஷேட அதிதிகளாக பாடசாலை மேன்படுத்தல் திட்ட இணைப்பாளர் எமஎம்.எம் றபீக் உதவி அதிபர் கே.எம்.குறைஸியா, பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஆரீப் மற்றும் ஆசிரிய ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்வியை தொடர்வதற்கு கஷ்ட்ட நிலையில் இருந்த மாணவர்களில் 60 பேருக்கு காலணிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கனடாவில் வசிக்கும் சம்சுல் நஹார் என்ற சகோதரியால் 4மாணவர்களுக்கு கல்வியைத்தொடர தொடர் உதவு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின்போது ஆதம்பாவா அஸ்வர் நண்பர்கள் வட்டம் பிரதி நிதிகளும் ஏனைய உதவிகளை வழங்கிய நலன்விரும்பிகளின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -