நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
பிரதேச சபைகளை அதிகரிபதனூடாக அரச நிர்வாகத்தை மக்கள் மத்தியில் கொண்டுவந்துவிடாதான ஒரு மாயை சிலர் தோற்றுவித்து வருகின்றனர் மாறாக பிரதேச செயலகங்களை அதிகரிபதனூடாகவே அரச நிர்வாக அபிவிருத்தியை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் பிரதேசபைகளை அதிகரிப்பதுடன் பிரதேச செயலகங்களையும் அதிகரிக்க வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் கோரிக்கையாகும் என மத்தியமாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வட்டவலை டெம்பஸ்டோவ் பாலத்தை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமாகிய ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் 21.10.2017 திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர்
ஆறுமுகம் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட 75 லட்சத்து ஐம்பதாயிரம் நிதிச்செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி பாலம் திறப்பு விழா நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை மத்தியமாகாண பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் பிரதேச சபை என்பது ஊள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் கீழ் உள்ளது இதில் அரசியல் ரீதியான சிறு சிறு அபிவித்திகளையே முன்னெடுக்கமுடியும் அதே போல பிரதேச செயலகங்களானது பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்றது நாட்டின் சகல அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களும் இந்த அமைச்சினூடாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
ஆகவே பிரதேச செயலகங்களை அதிகரிப்பதனூடாகவே முழுமையான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் இவ்வாறான நிலையில் ஒரு சிலர் பிரதேச சபையை அதிகரிப்பதனூடாக அரச நிர்வாகத்தை மக்கள் காலடிக்கு கொண்டுவந்து விட்டதான மாயையை தோற்றுவித்து வருகின்றனர் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் பிரதேச சபைகளும் அதிகரிக்கும் என்றார்.