அன்வர்டீனின் எதிர்கால திட்டங்களுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளேன் - கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி


பைஷல் இஸ்மாயில் -

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளரும், தொழில் அதிபருமான ஏ.பி.அன்வர்டீனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமகேவுக்கும் இடையிலான சந்தித்பொன்று நேற்றிரவு அம்பாறையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, அம்பாறை மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஆசிரியர்களின் இடமாற்றம் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் பற்றிய கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

மேலும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் அக்கரைப்பற்று மற்றும் அக்கரைப்பற்றை அன்டிய பிரதேசங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளையும், படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் பற்றியும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த பல வீதிகளை கடந்த ஒரு மாத காலத்துக்குள் 6 கோடி 91 இலட்சம் செலவில் கொங்றீட் வீதிகளாக மாற்றி நிர்மாணித்துக் கொடுத்து மக்களின் நன்மதிப்பையும், ஆதரவுகளையும் பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் சேவையை கிழக்கு மாகாண ஆளுநர் பாராட்டியதுடன் அவரின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான தன்னாலான சகல உதவிகளையும் செய்து தருவதாகவும், வேலையற்று இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் இதன்போது வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -