எம் கண் முன்னேயே எம் சமூகத்தின் அரசியல் பிரதிநித்துவத்தை விலை பேசி விற்றகொடூரத்தை ரசித்து ருசித்துப் பார்த்த ஒரு முட்டாள் சமூகம் நாமன்றி வேறு யாருமில்லை ,
அது மட்டுமல்லாமல் எங்கள் தலைவர் அதற்காய் சண்டை போட்டார் எமக்காய் குரல் உயர்த்திப் பேசினார் என்றெல்லாம் பேசிபேசி எம் சமூகத்தின் அரசியல் உரிமை நம் கண் முன்னே குழிதோண்டிப் புதைக்கப்பட்டதற்குக் கூட பதை பதைக்காமல் பெருமை பேசிய வெட்கம் கெட்ட அரசியல் தலைமைகளை உருவாக்கியதற்காய் நாம் நம்மையே செருப்பால் அடித்துக் கொள்ளவேண்டும்.
20 ஆம் அரசியலமைப்புச்சட்ட மூலம் மாகாண சபைகளுக்கு கொண்டு வரப்பட்ட போது கிழக்கு மாகாண சபையில் அது நிறைவேற்றப்பட்டதால் நாம் கிழக்கு மாகாண சபை வரலாற்றுத் துரோகத்தை செய்து விட்டதாக கூறினோம்.ஏன் நான் கூட அப்படித்தான் எண்ணிணேன்.
அதில் மாகாண சபையின் ஆட்சிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிப்பது எனவும் ஆளுனருக்கு அதிகாரம் இன்றி ஒரு வருடத்தில் அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் வைப்பது என்பதே 20 ஆம் திருத்த்த்தின் உள்ளடக்கமாகும்.
இதனால் சிறுபான்மையினருக்கான பாதிப்புக்கள் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை,ஆனால் பாராளுமன்றத்தில் எமது 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தற்கு அளித்த வாக்கு எம் சமூகத்தை மாகாண சபை பிரதிநிதித்துவக் கனவையும் இனிமேல் முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவையும் ஒரு சேர குழிதோண்ட புதைத்துள்ளனர்.
50க்கு 50 என்ற முறையின் மூலம் அதாவது 50 வீதம் தொகுதிவாரி 50 வீதம் விகதாரசாரப் பிரதிநதித்துவம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டால் கிழக்கின் தமிழர்கள் செறிந்து வாழும் பல பகுதிகளில் முஸ்லிங்களுக்கான பிரதிநிதித்துவம் வெற்றுக் கனவாகவே காணப்படும்,
அதனால் தான் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் ஒரு போது தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வில்லை,
விகிதாசாரப் பிரதிநித்துவ முறைமையன்றி வேறு எந்த முறைமையும் முஸ்லிங்களின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள உதவியளிக்காது,
50க்கு 50 மூலம் நாமே எமது அரசியல் பிரதிநிதித்திவத்தைக் குறைத்து இனிவரும் காலங்களில் முஸ்லிம் சமூகம் கிழக்கு மாகாணத்தில் அரசியல் அநாதைகளாவே இருக்கப்போகின்றார்கள்,
இனிவரும் மாகாண சபைகள் புதிய அதிகாரங்களுடன் உத்தேச அரசியல் யாப்பினூடாக வரும்போது முஸ்லிங்கள் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையினராகவும் ஆட்சியில் எவ்வித பலமும் அற்றவர்களாக இருப்பர் என்பதே நிதர்சனம்,
வெறும் பதவி நீடிப்புக்கான 20தைக் காட்டி கிழக்கு மாகாண சபையை பலிக்கடாவாக்கி பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை ஆதரித்து எமது சமூகத்தின் மாகாண அரசியல் பிரதிநிதித்துவ உரிமையை அடியோடு துடைத்தெறிந்துள்ளார்கள் எமது அரசியல் தலைமைகள்,
இனிமேல் ஒரு முஸ்லிமோ சிங்களவனோ கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராகவோ ஆளுங்கட்சியாகவோ வர முடியாது என்ற உறுதிப்பத்திரத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வந்துள்ளனர்,
நாங்கள் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வழிவந்த தைரியமிக்க முஸ்லிங்களாக இருந்தால் எம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு சிறு துளி எண்ணம் எம்மிடம் இருந்தால் தைரியமாக முன்வாருங்கள் முதுகெலும்பற்ற எம் அரசியல் தலைமைகளை கேள்விக ளால் துளைத்தெடுப்போம்.
நீங்கள் சார் கட்சியையோ தலைமையையோ இன்னும் புகழ்பாடி வந்தால் நீங்களும் நாளை இந்த மண்ணில் முஸ்லிம் சமூகம் அரசியல் அநாதையாக வாழ்வதற்கு சோரம் போனவர்கள்,உங்கள் சமூகம் உங்கள் தலைமைகளால் கயவனிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு கற்பழிக்கப்படும்போது வேடிக்கைப் பார்த்தவர்கள் நீங்கள்,
நாம் உன்னதமான சமூகம் நபி வழி வந்த சமூகம்,மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் உரிமைத் தாகத்தோடு வளர்ந்தவர்கள் நாம்,வாருங்கள் கைகோர்ப்போம்,எம்மை அந்திய சமூகத்திடம் விற்று விட்ட நம் தலைமைகளின் சட்டைகளை பிடித்து கேள்வி கேடபோம்.