தூக்கிலிட்டு தற்கொலை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிப் பிரதேசத்தில் சம்பவம்







முஹமட் சாஜித்-


நல்லதம்பி ஜெயசுதன் (29) என்பவரது மனைவியான செல்வம் யோகேஸ்வரி (26) என்ற இரு ஆண் பிள்ளைகளின் தாயே தற்கொலை செய்து கொண்டவராவார்.

கணவர் வெளிநாட்டில் இருக்கும்போது,  அவருக்கு தெரியாமல் இங்கு 120000/= ரூபா தனியார் நிறுவனமொன்றில் கடனாக பெற்றுக்கொண்ட இவர், மாதாமாதம் கணவர் செலவுக்கு அனுப்பும் பணத்திலேயே கட்டிவந்துள்ளார்.

கட்டாரில் கம்பனி மூடியதால் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கணவர் நாடு திரும்பியதால்,  கடனை கட்டுவதற்கு முடியாமல் போன இவர்,
இன்று அதிகாலை வீட்டுவளையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -