கட்டார் நாட்டின் மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால



ஜனாதிபதி ஊடகம்-
ட்டார் நாட்டின் மன்னர் தமீம் பின் அஹமட் அல்தானி அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுநாள் அரச முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (24) இரவு டோஹா நகரில் உள்ள ஹமட் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

கட்டார் நாட்டின் பொருளாதார, வர்த்தக அமைச்சர் செய்க் அஹமட் பின் யாசின் பின் மொஹமட் அல்தானி அவர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் விசேட பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் ஜனாதிபதி அவர்களை வரவேற்க பிரசன்னமாகியிருந்தனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலும் விசேட வரவேற்பு நிகழ்வொன்று தூதரக அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -