அப்துல்சலாம் யாசீம்-
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட முள்ளிப்பொத்தானை புஹாரிநகர், ஈச்சநகர் பகுதிகளைச்சேர்ந்த மக்களுக்கு தென்னங்கன்றுகள் நேற்று (29) வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப் பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி சேருவிலை தொகுதியின் பிரதான அமைப்பாளர் வைத்தியர் அருண சிறிசேன அவர்களின் ஊடாக மகரூப் றியால்தீன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஆயிரம் தென்னங்கன்றுகள் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இம்மரக்கன்றுகளை வழங்க முன்னர் மக்களுடன் கலந்துறையாடும் போது டொக்டர் அருண சிறிசேன கருத்துத்தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபை கழைக்கப் பட்டாலும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர்,மற்றும் அமைச்சர்களின் உதவியுடன் பிரதேச வீதி அபிவிருத்திகள், வீடுகள் கழிப்பரைகள் அமைத்து கொடுத்தல் இப்படியான பல சேவைகளை செய்ய திட்டமிட்டுமிட்டிருக்கின்றேன் எனவும் டொக்டர் அருண சிறி சேன தெரிவித்தார்.