சிவனொளிபாதமலை புனிதபூமி மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதி..!



மு.இராமச்சந்திரன்- 


சிவனொளிபாதமலை புனிதபூமி மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிக்குள் உள்வாங்கப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்திற்கு எதிராக அட்டன் நீதின்றத்தில் தடையுத்தரவு மனு பெறப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினருமாகிய எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் 31.10.2017 கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற ஆர்பாட்டத்திற்கே இவ் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபை மூன்றாக பிரித்து மஸ்கெலியா நோர்வூட் மற்றும் அம்பகமுவ என பிரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் சிங்கள மக்கள் செரிந்துவாழும் அம்பகமுவ பிரதேச சபை பகுதியிலிருந்து தமிழ் மக்கள் அதிகம் வாழும் மஸ்கெலியா பிரதேச சபைக்குற்பட்ட பகுதிக்கு பிரிந்து செல்வதனால் சிவனொளிபாத மலை பரிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது மேலும் இதுவரை காலமும் மூவின மக்களும் ஒற்றுமயையுடன் இருந்து வருகின்ற நிலையில் சிவனொளிபாதமலை பிரிந்து செல்வது சமூகத்தினிடையே முரன்பாட்டை தோற்றுவிக்கும் என எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார். 

கினிகத்தேன நகரில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட இடத்த்திற்குவருகைத்தந்த கினிகத்தேன பொலிஸ் நிலைய பொருபப்பதிகாரி சரத் சமரவீர நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தடையுத்தரவு மனுவை கையளித்தார் குறித்த மனுவில் பிரதான வீதியை மறித்து போக்குவத்துக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது என்பதுடன் நகரின் வர்த்தகநடவடிக்கைக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது எனவும் 14 நாட்களுக்கு இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் எனவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

நீதிமன்ற உதரவிற்கமைய பொது மக்களுக்கு இடையூறு இன்றி ஆர்பாட்டம்சுமார் இரண்டு மணித்தியாளங்கள் இடம்பெற்றதுடன் சிவனொளிபாதமலை பிரிவடைவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -