”தேசிய உணவு உற்பத்தி புரட்சி - விளைச்சல் பெரும் திட்டத்தில் ஒருமித்து எழுவோம் ”

அஷ்ரப் ஏ சமத்-

தேசிய உணவு உற்பத்தி புரட்சி - விளைச்சல் பெரும் திட்டத்தில் ஒருமித்து எழுவோம் ” என்ற திட்டத்தின் வடமாகண நிகழ்வுகள் ஒக்டோபா் 14 ஆம் திகதி வடமாகண சபையும்், தேசிய விவசாய அமைச்சும் இணைந்து வடக்கில் புத்துாாில் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைப்பாா். என இன்று ஜனாதிபதியின் ஊடக அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் வடக்கு விவசாய பணிப்பாளா் தட்சனாமூா்த்தி யோகேஸ்வரன் தெரிவித்தாா்.


மேலும் பேராதனை விவசாய திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளா் எஸ் பெரயசாமி, மகாவலி அதிகார சபையின் கட்டிடப் பணிப்பாளா் அஜந்தனி ஆகியோறும் இங்கு கருத்து தெரிவித்தனா்.


பேராதனை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளா் கருத்துத் தெரிவிக்கையில் -

ஜனாதிபதியின் இவ் விசேட திட்த்தின் கீழ் நெல் உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தியில் 50 வீதமாக அதிகரிக்கும் திட்டமாகும். இத் திட்டத்தின் கீழ் 25 வீட்டுத்திட்டம், 1300ஹெக்டயர் விவசாய நிலங்கள் தரிசு நிலமாக காணப்படுகின்றது. இவற்றில் 1008 நெல்விளைச்சலை ஏற்படுத்தல், 18 ஆயிரம் ஹெக்டயரில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தல், தற்பொழுது நாட்டில் உள்ள 2 போக விளைச்சலை 3 போகமாக மாற்றுதல், அத்துடன் பாசிப்பயறு விளைச்சலை வடமத்திய மாகாணத்தில் 10 ஹெக்டயருக்கு விஸ்தரித்தல்,

மகளிர் விவசாயிகள் அமைப்பினை 5 இலட்சம் பேரை ஏற்படுத்தல் பாடசாலை மாணவா்கள், மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள நிலங்களில் தெண்னைப் பயிருடதல், 5 இலட்சம்போருக்கு 40 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்குதல். மாடி வீடுகளில் குடியிருப்போறுக்கு சாடிகளில் மரக்கரி, கொச்சி போன்ற பயிர்களை வளா்ப்பதற்கு ஊக்குவித்தல், ஓய்வு பெற்றவா்களுக்கு அரை ஏக்கா் அல்லது காணி நிலங்கள் இருந்தல் அவா்கள் சுயமாகவே அருகில் உள்ள விவசாய திணைக்களத்தின் ஊடாக மரக்கன்றுகள் , ஆலோசனைகளை வழங்கி வைத்தல். என விவசாயப் பணிப்பாளா் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -