சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கமு/ எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் பரிசளிப்பும் 2017-10-02 ஆம் திகதி பாடசாலையின் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.நாபீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.ஐ.எம்.ஹில்மி, கிராமசேவை உத்தியோகத்தர் எல்.நாசர் மற்றும் மெக்ஸ் அபாயா நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.யூ.எம்.றியாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது பாடசாலையின் ஆசிரியர்களின் வழிகாட்டலில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.