ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
தேசியத்திலே முக்கிய பேசும் பொருளாக பார்க்கப்பட்டு வந்த ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபைக்கான தேர்தல் சுமார் பத்து வருடங்களுக்கு பிற்பாடு நேற்று 28.10.2017 சனிக்கிழமை குறித்த பள்ளிவாயலில் இடம் பெற்றது. அதில் ஹனீபா (மம்மளி) விதானையின் தலைமையில் போட்டியிட்ட குழுவானது 17 ஆசனங்களில் 12 ஆசனங்களை கைப்பற்றியதினால் மம்மளி விதானையின் குழுவிடம் ஓட்டமாவடி பள்ளிவாயலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபைக்கான நிருவாகம் கையளிக்கப்பட்டது.
அமைதியாகவும் முற்றிலும் ஜனநாயகத்தினை தழுவிய வகையில் நடந்த வாக்களிப்பில் 1200 க்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டமையானது குறித்த பள்ளிவாயலுக்கான புதிய நிருவாக தெரிவிற்கு ஜமாத்தார்கள் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதனை தேசியத்திற்கு எடுத்துக்காட்டும் விடயமாக இருக்கின்றது.
ஹனீபா விதானையின் குழுவில் போட்டியிட்ட மேலதீக பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், அல்-ஹாஜ் ஏ.எல்.ஹபீப் மொஹம்மட், பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நசீர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஜமீல், வைத்தியர் எம்.எம்.முஸ்தபா, முன்னாள் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட், மேலதீக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், ஆசிரியர் எம்.ஐ. இல்யாஸ், எம்.எம். ஹனீபா (மம்மளி விதானை), மெளலவி எம்.எஸ்.எம்.அஸ்ரஃப், மெளலவி யூ.ஏ.மஜீத்,மெளலவி எஸ்.எல்.எம்.முஸ்தபா ஆகியோர்கள் வெற்றியீட்டி உள்ளமை மம்மளி விதானைக்கு ஓட்டமாவடி பிரதேச மக்கள் எந்தளவு கெளரவத்தினை கொடுத்து நம்பிக்கையுடன் பள்ளிவாயல் நிருவாகத்தினையும் கையளித்துள்ளனர் என்ற செய்தி பறைசாற்றும் விடயமாக பார்க்கப்படுகின்றது.
அத்தோடு ஏனைய குழுவில் போட்டியிட்ட ஏ.எல்.எம்.ஹனீபா ஹாஜியார், ஏ.எம்.எம்.உவைஸ், வைத்தியர் எம்.பி.எம். பிர்னாஸ், வைத்தியர்.எஸ்.ரி.எம்.நஜீப் கான், ஐ.ரி.அஸ்மி, வெற்றியீட்டி உள்ளனர். மேலும் மிக நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிவாயல் நிருவாக தெரிவில் அமோக வெற்றீட்டிய மம்மலி விதானையினை ஜமாத்தார்கள் கட்டியணைத்து தங்களது வாழுத்துக்களை தெரிவித்தனை அவதானிக்க கூடியதாக இருந்த அதே நேரத்தில் கூடிய விருப்பு வாக்குகுகளுடன் முன்னாள் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் மற்றும் மம்மலி விதானையின் வெற்றியானது கல்குடாவில் எதிர் காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தினை அல்லது ஒரு மறுமலர்ச்சியுடனான மாற்றத்தினை நோக்கிய பயணமாகவும் இருக்கலாம் என்பதும் ஊகிக்க கூடிய விடயமாகவே மறுபக்கத்தில் நோக்கப்படுகின்றது.
அந்த வகையிலே வரலாற்றில் கல்குடா அரசியலினை தீர்மானிக்கும் சத்தியாகவும், கல்குடாவின் பாராளுமன்றம் என்றழைக்கப்படும் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கான நம்பிக்கையாளர் சபை தேர்தலில் ஹனீபா (மம்மலி) விதானைக்கும் அவருடைய குழுவிற்கும் மக்கள் வழங்கியுள்ள குறித்த வெற்றியானது எதிர்காலத்தில் மம்மலி விதானை ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் தவிசாளர் பதவியினை கைப்பற்றுவார் என்பது அரசியல் ரீதியான எதிர்வு கூறலாக பார்க்கப்படும் அதே நேரத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கின்றது.
மேலும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ள ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கான நம்பிக்கையாளர் தேர்தலில் இடம் பெற்ற நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.