அவர் மேலும் தெரிவிக்கையில்>
யாரிடமும் காழ்ப்புணர்ச்சி மற்றும் தாழ் வுச் சிக்கல்கள் கொண்ட கட்சி அல்ல. தமிழரசுக் கட்சி பரந்த சிந்தனை கொண்ட கட்சி கட்சியின் வரலாற்றைப் பார்த்தால் எத்தனைபேர் எம்மோடு இருந்தார்கள். சென்றார்கள். திரும்பி வந்தார்கள் அத்தகைய கட்சியின் தலைவராக நீண்ட வரலாற்றுப் பண்பாட்டைக் கொண்ட மாவை சேனாதிராஜாவே அடுத்த முதலமைச்சராக வரவேண்டும்.
தமிழினத்திற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்ற பெருமைந்தருடைய வரலாறை மீட்டுப் பார்க்கின்ற நாளாக இதனைப் பார்க்கின்றோம். 1970 ஆம் ஆண்டு புரட்சிகரமாக சிந்தித்த காலத்தில் மாவை சேனாதிராஜாவும் ஒரு சிந்தனைவாதியாக தன்னை அடையாளப்படுத்தியவர். அவருடைய அரசியல் 50 ஆண்டுகளைத் தாண்டியுள்ளது.
ஊடகங்கள் பல கேள்விகளை தற்போது கேட்டு வருகின்றது. குறிப்பாக அடுத்த முதலமைச்சர் யார் என்று கேட்கிறார்கள். இதற்குப் பதில் வழங்குகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தியாகங்கள் பற்றி நீண்ட விளக்கத்தை வழங்கினேன்.
முதலமைச்சராக வருவதற்கு அவரை கேட்டபோது தனக்குப் பதவி பெரிதல்ல. தமிழ் இனத்திற்கு என்ன தேவை அதனைச் சொல்லுங்கள், தான் செய்வதாகக் கூறினார். அவர் நினைத்திருந்தால் முதலமைச்சர் பதவிக்கு தான் கேட்கப்போவதாக கூறினால் யாரும் தடுத்திருக்கமாட்டார்கள். தற்போது கூட பலரும் இதனைத்தான் கூறுகின்றார்கள்.
அவ்வாறு எல்லாம் பதவிகளைப் பற்றிச் சிந்திக்காது தமிழினம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதன் தான் இவர். கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையும் சிறிபவன் தானே அடுத்த முதலமைச்சர் என்று சிங்களப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன என கேட்டார்கள். இதற்கு நான் பதில் கூறும்போது அவ்வாறு கட்சியில் முடிவு ஏதும் எடுக்கவில்லை. கட்சி அவ்வாறு சிந்திக்கவும் இல்லை.
அவ்வாறானால் யார் முதலமைச்சர் எனக் கேட்டார்கள் அதற்கு வரலாறு தெரிந்தவர் ஒரு கனதியானவர் அவர்தான் மாவைசேனாதிராஜா அவர்தான் அடுத்து முதலமைச்சர் என்று எனது கருத்தைத் தெரிவித்தேன் இதனையே இன்றும் தெரிவிக்கின்றேன். காரணம் வரலாற்று அடையாளங்கள் அவரிடமே உள்ளது மக்கள் பற்றிய சிந்தனை இன்றுமே உள்ளது. மக்களுடைய பிரச்சினைக்கானதீர்வு என்னும் கிடைக்கவில்லை அதற்கான சந்தர்ப்பத்தை சிங்கள அரசாங்கம் தரவில்லை என்ற ஏக்கம் அவரிடம் இன்றும் உள்ளது.
தலைவர் பிரபாகரனுடன் இதே மாவிட்டபுர மண்ணில் தலைவர் மாவை சேனாதிராஜாவும் சந்தித்துக் கலந்துரையாடியமை அவருக்கும் அவரைப்போன்ற ஒரு சிலருக்குமே தெரியும். பெரும் தலைவர்களுடனும் போராளிகளுடனும் தொடர்புபட்ட தலைவராக இருப்பவர் இவரே. கட்சிகள் சரி மக்கள் சரி அவர்களுடைய ஒற்றுமைக்காக எல்லோரையும் அரவணைத்துச் செல்பவர் இவர்தான். எந்த வாய்களால் ஒரு மனிதருக்கு வாக்குப் போடுங்கள் அவரை முதலமைச்சராக்குங்கள் என்று பேசினோமோ அதே வாய்களால் இன்னுமொரு தடவை அவரைத் தூற்றுகின்ற எண்ணங்கள் எம்மிடம் இல்லை. தமிழரசுக் கட்சியிடமுமில்லை. யாரிடமும் காழ்புணர்ச்சி மற்றும் தாழ்வுச் சிக்கல்கள் கொண்ட கட்சி அல்ல.

தமிழரசுக் கட்சி பரந்த சிந்தனை கொண்ட கட்சி. கட்சியின் வரலாற்றைப் பார்த்தால் எத்தனைபேர் எம்மோடு இருந்தார்கள். சென்றார்கள. திரும்பி வந்தார்கள். ஆகவே இந்த வரலாறை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் .இத்தகைய வரலாற்றைக் கொண்டவரே மாவை சேனாதிராஜா ஆவார் என்றார்.(வீ)