பெண் ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு அசாத் சாலியிடம் சென்றதன் காரணம் என்ன சுபைர் ஹாஜி பதில் சொல்ல வேண்டும்

ல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் வௌி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது கிழக்கின் அனைத்து அரசியல்வாதிகளும் தற்போது அறிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சுபைர் ஹாஜியாரும் ஏறாவூரைச் சேர்ந்த வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற பெண் ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு அசாத் சாலியிடம் சென்று அவர்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.

கௌரவ சுபைர் ஹாஜியார் அவர்களே அசாத் சாலிக்கு முதலில் கல்வியியல் கல்லூரி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவருக்கு வௌிமாகாணங்களில் எமது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதனால் நாம் எதிர் நோக்கும் பிரச்சினை குறித்த அறிவு இருக்கின்றதா???

அல்லது இந்தப் பிரச்சினையை உரிய அதிகாரிகளிடம் முன்வைத்து அதனைப் தீர்த்துக் கொடுப்பதற்கான ஆளுமை அசாத் சாலியிடம் இருக்கின்றதா?????

ஆகவே முஸ்லிங்களையே பொதுபல சேனாவிடம் காட்டிக் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் அசாத் சாலியிடம் போய் இந்த பிள்ளைகளின் பிரச்சினையை முறையிடுவது ஓநாயிடம் சென்று ஆட்டுக்குட்டியின் பிரச்சினையை கூறுவது போலாகும்,

எங்கள் பெண்பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்துச் சென்று காட்சிப்படுத்துவதற்கு அவர்கள் என்ன காட்சிப் பொருட்களா????

ஏன் உங்களுக்கே நேரடியாக சென்று கல்வியமைச்சரையோ அல்லது அமைச்சின் செயலாளரையோ சந்தித்து வௌிமாகாணத்தற்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதா???? அல்லது அதற்குரிய ஆளுமை உங்களிடம் இல்லையா????

சரி அதற்குரிய ஆளுமை உங்களிடம் இல்லையென்று வைத்துக் கொள்வோம்,அசாத் சாலியை விட ஆளுமையுள்ள தலைவர்கள் எவரும் கிழக்கு மாகாணத்தில் இல்லையா?????

ஏன் உங்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு தகுதியில்லாதவரா??அல்லது அவரிடம் உதவி கேட்பதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா???

அல்லது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விருப்பமில்லையா??

இல்லை நீங்கள் தனியாக இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் கட்சியில் ஹிஸ்புல்லாவை விட முக்கிய இடத்தை பெற்று விடலாம் என்ற எண்ணமாக இருக்குமோ தெரியவில்லை,

எதுவாக இருந்தாலும் கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே என்பது போல மற்றைய அரசியல்வாதிகளும் அறிக்கை விடுகின்றாரே தாமும் அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காய் இவ்வாறான பணிகளை செய்யாதீர்.

வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெறும் ஆசிரியர்கள் படும் கஷ்டங்கள் அவர்களுக்குத் தான்,தெரியும் அதனால் அவர்களின் கண்ணீரில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -