நாச்சியாதீவில் பழைய மாணவர் சங்கம் அங்குரார்பணக்கூட்டம்

வம்பர் 06 ஆம் திகதி நாச்சியாதீவு முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் அங்குரார்பணக்கூட்டம் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அதன் நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கின்றது. அந்த வகையில் இந்தப்பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைக் கற்ற பலர் இப்போது உயர் பதவிகளிலிலும்,உயர் அந்தஸ்துகளிலும் இருக்கின்றார்கள். அந்த வகையில் இப்பாடசாலைக்கான பழையமாணவர்கள் சங்கமொன்று இல்லாத குறையொன்று மிகநீண்ட காலமாக நிலவி வந்தது. அதுமாத்திரமின்றி பாடசாலை அபிவிருத்தி சங்கமும் போதிய பங்களிப்பினை இப்பாடசாலையின் வளர்சிக்கு பூரணமாக வழங்கவில்லை எனவே இவற்றைக்கருத்திற்கொண்டு எதிர் வரும் காலங்களில் பாடசாலைக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் அண்மையில் புதிய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலை அதிபர் எச்.எம்.சஹீட் தலைமையில் உருவாக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக பாடசாலைக்கான பழையமாணவர் சங்கமொன்றை உருவாக்குவதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டமொன்றை தற்போதைய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஏ.எம்.இல்ஹாம் பொறியியலாளர் எச்.எம்.ஹம்சீன் மற்றும் ஏ.எல்.எம்.ரஸ்மி பாடசாலை அதிபர் எச்.எம்.சஹீட் ஆகியோரின் முயற்சியினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கட்சி,இயக்க பேதங்களுக்கு அப்பால் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மிக நீண்ட காலங்களுக்குப்பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலுக்கான கூட்டமாக இதனைக்கொள்ள முடியும்.

நாச்சியாதீவு பாடசாலையில் கல்விகற்ற பலதரப்பட்டவர்களுக்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டமானது பழையமாணவர் சங்கத்தினை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைக்கூட்டம் மட்டுமே என்பதனை ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்திலேயே பதிந்தனர். நிருவாக உத்தியோகத்தர் எச்.எம்.இஸ்மாயில், ஏ.ஆர்.எம்.பர்வீன், முன்னாள் திறப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.பஸ்மி, தாரிக் ஹாஜியார், விவாகப்பதிவாளர் எம்.எம்.ரிஷான், தற்போதைய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஏ.எம்.இல்ஹாம், நாச்சியாதீவு மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தானாதிகாரி எஸ்.எச்.சல்மான் பாரிஸ் ஆகியோர் இங்கு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கடந்த காலங்களில் வெவ்வேறு கட்சி ரீதியான முரண்பாடுகளினால் வளங்களை ஒருத்தலத்திற்கு குவிக்க முடியாமை இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் அபிவிருத்திக்காக எல்லா வகையான அரசியல் செயற்பாளர்களையும் ஒன்றிணைத்து செயற்பட முனைந்திருப்பதானது ஒரு நல்ல சகுனமாக கொள்ள முடியும். இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

எதிர்வரும் 04/11/2017 சனிக்கிழமை பொதுக்கூட்டத்தில் பழைய மாணவர் சங்கத்தை தெரிவு செய்தல். அன்றைய தினம் வெளியே இருக்கின்ற இந்தப்பாடசாலையின் பழைய மாணவர்களையும் அழைத்து அவர்களையும் இணைத்துக் கொள்ளல். எந்த அரசியல்வாதியினதும் அல்லது அரசியல் கட்சியினதும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு இயங்குகின்ற வகையில் அமையாமல் பாடசாலையின் அபிவிருத்தி,மாணவர்களின் கல்வி விருத்தி தொடர்பிலான திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தல்,கடந்த காலங்களில் விட்ட பிழைகளை திருத்திக்கொண்டு அனைவரையும் அணைத்துக்கொண்டு இந்தப்பயணத்தை முன்னெடுத்து செல்லல். மாணவர்களுக்கு,பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிட்சியினை வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இரவு 8 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் ஆரோக்கியமான கலந்துரையாடல்களுடன் சுமூகமாக இரவு 10.30க்கு நிறைவுக்கு வந்தது. எதிர்காலத்தில் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலத்தின் ஆரோக்கியமான பெறுபேறுகளுக்கான அடித்தளமாக இதனைக் கொள்ள முடியும். மிகநீண்ட காலத்தின் பின்னராவது இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த சகோததரகள் இதயத்து நன்றிக்குரியவர்கள்.

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து நமது கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் ஒற்றுமையுடன் செயற்பட உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து செயலாற்றுவதற்கான திறந்த களமாக இதனை பயன்படுத்த முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -