முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் பமுனுகம பிரதேசத்தில் பாதை செப்பனிடும் பணி ஆரம்பம்.



முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் தொடர்ச்சியாக திறப்பனை பிரதேசத்தின் பல பாகங்களிலும் பாதைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்றுவருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று புதன்கிழமை பமுனுகம சந்தி தொடக்கம் அமுநிச்ச கிராமம் வரையான பாதை செப்பனிடும் பணி இன்று ஆரம்பமானது.

மிகிந்தலை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் சட்டத்தரணி சஞ்சீவ செனவிரத்ன மற்றும் முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இணைந்து செயற்படுத்தும் இச்செயற்றிட்டத்திற்கு சுமார் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சேவைகள் பற்றி அப்பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் “தேர்தல் காலங்களில் மட்டும் ஓரிரு சேவைகளை மக்களுக்கு காட்டி வாக்குகளை கொள்ளையடிக்க எத்தனிக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் தனது அயராத முயற்சியால் தன்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் மக்கள் நலனை கருத்திற்கொண்டு முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் செயற்படுவது மிகவும் பாராட்டக்கூடிய விடயமே” என்று தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -