பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பதவி இழந்தோமே நாம்
பதவி இழந்தோமே!
------------
குரங்குகள் போலே சபைதனில் மேலே
தாவித் திரிந்தோமே
குள்ளர்களாக இருந்து கொண்டே
குழிபறித்தோமே நமக்குள்
குழிபறித்தோமே!
------------
வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்ந்திருந்தோமே
வந்த பணத்தை சொந்தப் பணமாய்
செலவு செய்தோமே
நாமே செலவு செய்தோமே!
------------
எந்த ஊரில் எந்த எந்தத் தெருவில்
எதனைச் செய்தோமோ?
எந்த அழகில் எந்த முகத்தில்
எவரை விழிப்போமோ?
அந்த நாளை இந்த நாளில்
மறந்து போனோமே!
இல்லம் கண்டு பள்ளி கொண்டு
உறங்கி நிற்போமே
என்றும் ஒழிந்து நிற்போமே..
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-