நாவலப்பிட்டி பொலிஸ் பிரவுக்குட்பட்ட ஹுனுகொட்டுவ பகுதியில் 27.10.2017 அன்று வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழைக்காரணமாக ஹுனுக்கொட்டுவ தோட்டத்தில் அமைந்திருந்த சிறிய குளம் ஒன்று உடைப்பெடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில தோட்ட தொழிலாளர்களின் ஐந்து வீடுகள் பாதிப்படைந்தன.
வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டுபகரணங்கள் பாதிக்கப்பட்டதுடன் வீடுகளில் தங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த ஐந்து வீடுகளையும் சேர்ந்த 20 பேர் தற்காலிகமாக அயலவர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
ஹுனுகொட்டுவ பாடசாலைக்கு செல்லும் மார்க்கத்தில் அமைந்திருந்த சிறிய பாலம் ஒன்றும் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பாதையின் பயணம் மிக அபாயகரமாணதாக மாறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கு தோட்ட முகாமைத்துவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர்.