ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கட்டாருக்கு விஜயம்செய்யவுள்ளார்.இவ்விஜயத்தின் போது அமைச்சர்கள் ஹக்கீம், றிஷாத், பைசார் முஸ்தபா, முஜீபுர் ரஹ்மான்,ஆகியோரும் இணைந்துகொள்கின்றனர்.
இவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அன்பின் நிமிர்த்தம் அழைத்துச்செல்லவில்லை என்பதை இலங்கை முஸ்லிம்கள் நன்றாகபுரிந்துகொள்ளவேண்டும்.இவர்கள் நான்கு பேரும் நான்கு கட்சிகளைபிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.இவர்களை அழைத்துச் செல்லும் போது இலங்கையில்உள்ள அனைத்து முஸ்லிம்களும் இவ்வரசுடன் உள்ளார்கள் என்ற செய்தி கட்டார் அரசுக்குகொண்டு சேர்க்கப்படும்.
இதன்மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளால் இவ்வரசுமுஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடுடையது என்ற சர்வதேச நிலைப்பாட்டை தகர்த்து,இலங்கை அரசு கட்டார் அரசிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள இவ்விடயம் துணைபுரியும். இலங்கை நாட்டின் முன்னேற்றம் கருதி இவ்வாறான விடயங்களை முஸ்லிம்அரசியல் வாதிகள் செய்வது பிழையல்ல ஆனால் முஸ்லிம்கள் இப்படி செயற்படவேண்டுமாக இருந்தால் அந்த வகையில் முஸ்லிம்கள் இலங்கையில் நடாத்தப்படவேண்டும்.
சவூதி தனவந்தர்களால் வழங்கப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் இன்னும்வழங்கப்படவில்லை.முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளை வில்பத்து வர்த்தமானியாகஅறிவித்த வர்த்தமானி இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை. இந்த ஆட்சி மாற்றத்தில்முக்கிய பேசுபொருளாக இருந்த அலுத்கமைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லைஉற்பட இலங்கை முஸ்லிம்களின் இருப்பு பல வகையில் கேள்விக்குறியாகியுள்ளது இந்தபின்னணியில் ஜனாதிபதியுடன் கட்டார் பயணமாவது பொருத்தமானதல்ல.
இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்படுவதை நாம் தொடர்ந்துஅனுமதிக்க முடியாது.
ஜனாதிபதியுடன் கட்டார் செல்ல முஸ்லிம் அரசியல் வாதிகள் மறுப்பு வெளியிடாமல்தங்கள் பற்களை இழித்துக் கொண்டு ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருவதுதொடர்பில் நாம் வெட்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.