கிழக்கு மாகாண பிரதம செயலாளர்-பிரதிப்பிரதம செயலாளர் மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடனான விஷேட சந்திப்பொன்று திருகோணமலை வரோதய நகர் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்ற போதே ஆளுனர் தெரிவித்தார்.
குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ டிசம்பர் 31ம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்க வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம் ஜனவரி மாதம் வழமைபோல் நடைபெறுமெனவும் அதில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது எனவும் கிழக்கு மாகாண சுகாதா பணிப்பாளர் டொக்டர் கே.முருகாணந்தம் தெரிவித்தார்.
இதேவேளை இடமாற்றம் தொடர்பாக யாரும் தொலைபேசி அழைப்புக்களோ அல்லது வேண்டுகோளோ விடுக்க வேண்டாமெனவும் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.