தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலையின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டம்

மிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி இன்று
(30.10.2017) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

01) சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்தவிதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

02) உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.

03) சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (அததெரண)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -