மாணவர்களுக்கு கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் எந்தப் பகுதிக்கு சென்றும் பணியாற்றும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
அதனால் தான் ஆசிரியர் தொழில் புனிதமாக கருதப்படுவதுடன் இன மத பிரதேச வேறுபாடின்றி சேவை செய்யும் மனப்பாங்கை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் அமீர் அலி
கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் வௌிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன,
மனிதாபிமான ரீதியில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் கல்வியியல் கல்லூரிகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் நியமனக் கடிதங்களில் குறித்த அவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் சேவை செய்யக் கூடியவராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே அவர்கள் எந்தப் பிரதேசத்திலும் பணிபுரிய கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்,
நுவரெலியா மாத்தறை போன்ற இடங்களில் கல்வி கற்பவர்கள் எங்கள் மாணவர்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது,எனவே ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களே என்பதைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு கற்பிக்க முன்வர வேண்டும்.
நமது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அங்கும் உள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்,
ஆகவே கல்வியியல் கல்லூரிகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமக்கு நியமனம் கிடைக்கப் பெற்ற பகுதிகளுக்கு சென்று நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டும்.
ஓட்டமாவடிப் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன் ஆயத்தங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்,