மலையக மக்கள் காணியுரிமை உடையவர்களாக திகழ வேண்டும் -அமைச்சர் பழனி திகாம்பரம்

தலவாக்கலை பி.கேதீஸ்-

லையக மக்கள் காணியுரிமை உடையவர்களாக திகழ வேண்டும் என்ற எனது இலட்சிய இலக்குக்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம்; தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகையை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ.ஸ்ரீதரன், சிங். பொன்னையா உட்பட தோட்டக் கமிட்டித் தலைவர்கள், தலைவிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளிர் அணித் தலைவிகள், திகா மன்ற கெப்டன்கள், அமைப்பாளர்கள்,முழுநேர உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில்,

மலையகத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் கட்டப்பட்டு வரும் 6800 தனி வீடுகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் 2800 குடும்பங்களுக்கு எதிர்வரும் 29 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. 

எனவே, எமது மக்கள் உணர்வுப் பூர்வமாக கலந்து கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை சிறப்பிக்க வேண்டும் .தொழிலாளர் தேசிய சங்கம் தொழிற்சங்க ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது.

 கடந்த தேர்தலில் எமது மக்கள் கட்டுக் கோப்புடனும், நம்பிக்கையுடனும் வாக்களித்த காரணத்தால் இன்று நான் அமைச்சராக இருக்கின்றேன். அதன் பயனாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதில் தலா ஏழு பேர்ச் காணியில் அமைக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டம் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் தனி வீட்டுத் திட்டம் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெறுமனே வீடுகளை மாத்திரம் கட்டிக் கொடுக்காமல்,எமது மக்கள் காணி உரிமை பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயற்பட்டு வருகின்றோம். அதில் முதற் கட்டமாக இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபாள சிறிசேன தலைமையில் தலவாக்கலையில் 71 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் கையளிக்கப்பட்டன. 

இரண்டாவது கட்டமாக இம் மாதம் 29 ஆந் திகதி அட்டனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் எமது மக்கள் உணர்வுப் பூர்வமாக கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.எமது மக்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் தலைமையில் தூய நோக்குடன் காணி உறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 இந்த நல்ல நோக்கத்தை எமது மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற விமர்சனங்களை மேற்கொள்வோருக்கு தகுந்த விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். எனது காலத்தில் மலையகத்தில் பரவலாக அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. 

எனவே, எமது மக்களுக்கு தேவையானவற்றை இனங்கண்டு நாம் சேவைகளை செய்து வருகின்றோம். நாம் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் மக்கள் சிந்தனை தெளிவோடு கலந்து கொள்ள வேண்டும். இதில் தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு இருப்பதை மறந்து விடக் கூடாது. 

பிரதமர் ரணில் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு எமது மக்கள் பெருமளவில் வருகை தருவதன் ஊடாக அவரிடம் மேலும் பல நன்மைகளை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -