சர்வதேச சிறுவர் தினத்தi முன்னிட்டு காரைதீவு விபுலானந்த மொன்ரிசோரி பாலர் பாடசாலையினர் இன்று (1) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவுக்கடற்கரையில் சிறுவர் தினக்கொண்டாட்டத்தை நடாத்தவள்ளனர்.
பாடசாலை ஆசிரியைகளான ஜெயநிலந்தினி ரம்யா தலைமையில் நடைபெறவுள்ள இச்சிறுவர் தினக்கொண்டாட்டத்தின்போது சிறுவர் விளையாட்டுக்கள் கடற்கரையில் இடம்பெறவிருக்கின்றன.
சிறுவர்விளையாட்டில் பங்கேற்கும் சிறுவர்சிறுமியர்களுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை நாளை 2ஆம் திகதி இப்பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு வைபவரீதியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் சர்வதேச சிறுவர் தினவிழா எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை நகரமண்டபத்தில் வலய்ககல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் நடைபெறவுள்ளது.