சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி நாளேட்டின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம். அமீன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் ‘பாரம்பரியம்’ நிகழ்ச்சி மூலம் பேட்டி காணப்படவுள்ளார். இந்நிகழ்ச்சி இன்று (24) செவ்வாய்கிழமை இரவு 8.15 மணி முதல் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும்.
மூத்த வானொலிக் கலைஞரான அமீன், தனது வானொலி மற்றும் ஊடகத்துறை அனுபவங்களை நேர் காணலில் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
முஸ்லிம் சேவைப்பணிப்பாளர் ஹாபிஸ் முஹம்மது ஹனிபாவின் வழிகாட்டலில் மூத்த வானொலிக் கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா நேர்காணலை நடத்துகிறார்.