இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
"கிழக்கு மாகாண மக்களின் கையுதிர்க்க முடியாத இறைமை அதிகாரத்தினை மீறும் வகையில் கிழக்கு மக்களின் அபிப்பிராயங்களைக் பெறாமல் கிழக்கு மாகாணத்தினை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கான அரசியலமைப்பு மாற்ற சூழ்ச்சி நிகழச்சி நிரல் ஒன்று அரங்கேற்றப்படுவதாக தெரிகிறது.
அன்மையில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையினை கிழக்கு மக்கள் அவையம் மிகக் கவனமாக ஆராயந்து வருகின்றது. பூர்வாங்க ஆய்வுகளின்படி குறித்த இடைக்கால அறிக்கை கிழக்கு மாகாண மக்களின் அரசியல் பெறுமதி, இறைமை, பொருளாதாரம், வாழ்வியல் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கடுமையாக பாதிக்கும் தன்மையுடையதாக காணப்படுவதாக உணர முடிகிறது.
இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் துறைசார் புலமையாளர்களுடன் ஆழமான கருத்து பறிமாறல்களையும் அவையம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு சமாந்தரமாக கிழக்கு மாகாண மக்கள் ஒன்றினைந்து இந்த அரசியலமைப்பு மாற்ற சூழ்ச்சியின் மூலம் கிழக்கு மக்களை அடிமைப்படுத்த எடுக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டியுள்ளது.
இதற்காக விழப்புணர்வுகளையும், பேரணிகளையும் மற்றும் எழுச்சிப் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் கிழக்கு மக்கள் அவையம் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு அனைத்து முஸ்லிம் தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்" என்றார்.