ஹஸ்பர் ஏ ஹலீம்-
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று(14) புடவைக் கட்டு பாடசாலை வீதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமான இவ் வீதி 2கோடியே 27 இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள வீதியாகும்.கடந்த காலங்களில் புனரமைப்புச் செய்யப்படாமை காணப்பட்டதையடுத்து மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.அதனையடுத்து இவ்வீதி புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.