மு.இராமச்சந்திரன்-ஸ்டோனி கிளிப் தமிழ் வித்தியாலயம் மவுன்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயம் மற்றும் டிம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கிடையில் கடந்த சனிக்கிழமை(28.10.2017) இடம்பெற்ற கணித வினா விடைப்போட்டியில் டிம்புள்ள தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள்
வருடந்தோறும் இடம்பெற்றுவரும் இப்போட்டியானது டிம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபரும் கணிதப்பாட ஆசிரியருமான மலர்வண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
தரம் பதினொன்னறில் கல்வி பயிலும் மேற்படி மூன்று பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்குப்பறிறிய இப்போட்டியில் டிம்புள்ள தமிழ் வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்ததையும் மவுண்ட்வெர்ணன் தமிழ் வித்தயாலய மாணவர்கள் இரண்டாம் இடத்ததையும் ஸ்டோனி கிளிப்ப் தமிழ் வித்யாலய மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். வெற்றிப்பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வெற்றிக்கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன
நிகழ்வின் பிரதம அதிதியாக நுவரெலிய கல்வி வலயத்தின் கோட்டம் இரண்டின் கல்விப்பணிப்பாளர் லோகநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு அயற்பாடசாலைகளின் அதிபர்கள் கணிதப்பாட ஆசிரியர்கள் உட்பட டிம்புள்ள தமிழ் மகா வித்யாலய ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.