“முகவரி தந்த முத்துக்கள்” ஆதர்சன ஆசான்களுக்கான பனி பாராட்டு விழா என்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் அதிபர்களான எம்.சி.ஆதம்பாவா, ஏ.எம்.ஹுசைன் மற்றும் இப்போதைய அதிபர் எம்.எஸ்.முகம்மட் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த காலப்பகுதியில் கற்பித்த ஆசிரியர்கள் வயது காரணமாக தள்ளாடிய நிலையிலும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். சிலர் எங்களை விட்டு பிரிந்திருந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்து கெளரவங்களைப் பெற்றனர்.
ஸாஹிறா கல்லூரியில் முதன் முறையாக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் அந்தக்கால பகுதியில் கற்ற மாணவர்களாலும் கற்பித்த ஆசிரியர்களாலும் நினைவுகூரப்பட்டது.
ஆங்காங்கே ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் வித்தியாசமான முறையில் அப்போது கற்ற மாணவர்களால் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது அந்த ஆசிரியர்களின் உள்ளங்களை பூரிப்படைய வைத்ததுடன் மாணவர்களையும் மகிழ்வடைய வைத்தது.
இன் நிகழ்வின்போது “முகவரி தந்த முத்துக்கள்” என்ற விழா மலர் ஒன்றும் அமைப்பின் சார்பில் மலர்க்குழுத் தலைவர் எம்.ஐ.முகம்மட் சதாத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.