முஸ்லிம்கள் முட்டாளாக்கப் படுகின்றார்களா..?

எம்எச்எம்இப்றாஹிம் கல்முனை-

ட்டாருக்கு செல்லும்போது அனைத்து முஸ்லிம் கட்சித்தலைவர்களையும் அழைத்துச் சென்றார் ஜனாதிபதி மைத்திரி அவர்கள்.

ஜனாதிபதி மைத்திரியுடன் சென்ற நமது தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏதோ; கிடைக்காது ஒன்று கிடைத்துவிட்டதுபோல், ஜனாதிபதியுடன் கூடி இருந்து சிரித்து மகிழ்ந்து இருப்பதுபோல் விதம் விதமான புகைப்படங்களையும் வெளியிட்டு சந்தோசப்பட்டுக் கொண்டார்கள்.

அதற்கு பின்னாலிருக்கும் சதியை புரிந்துகொள்ளாத போராளிகளும், கோமாளிகளும், ஏமாளிகளும் ஆகா என்று பெருமைப்பட்டும் கொண்டார்கள்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் கட்டார் பிரயாணத்தை முடித்து வந்த கையோடு போட்ட சட்டம் என்னவென்றால், மாடுகளை வாகனங்களில் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைவிதித்து கட்டளை இட்டதுதான்.
இது இலேசான கட்டளையல்ல என்பதை நமது முஸ்லிம் சமூகத்தில் எத்தனைபேர் அறிந்திருப்பார்களோ தெறியாது.

கட்டார் பிரயாணத்தை ஜனாதிபதியுடன் சந்தோசமாக கழித்துவிட்டுவந்த நமது எஜமானர்கள் இதனைப்பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை. எப்படி வாய் திறக்கமுடியும்? நேற்றுத்தான் ஜனாதிபதியுடன் ஜாலியாக இருந்துவிட்டு வந்தவர்களுக்கு, அன்புக்குறிய ஜனாதிபதியை எப்படி இந்த விடயத்துக்காக எதிர்ப்பது என்ற திரிசங்கு நிலைதான் இதற்கு காரணமாகும்.

இந்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திய ஜனாதிபதி மைத்திரி அவர்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த தடையை விதித்து விட்டார்.
( தலையை தடவி கண்ணைப் பிடுங்கி விட்டார் என்பதே இதன் பொருளாகும்)

இந்த கட்டளை மூலம் இதற பகுதியில் உள்ள மக்கள் அறுவை மாடுகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதனால் மாடுவளர்ப்புகள் குறைந்த பகுதி மக்களுக்கு மாடுகளை உணவாக சாப்பிடும் பாக்கியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது எனலாம்.
இந்தத்தடை இலங்கைகையில் முற்றாக மாடறுப்பதை தடைசெய்வதற்கான முன்னேற்பாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

இதற்காகத்தான் நமது முஸ்லிம் தானைத் தளபதிகளை ஜனாதிபதி கட்டாருக்கு அழைத்துச் சென்றாரோ என்றும் என்னத் தோன்றுகிறது.

ரத்தமின்றி கத்தியின்றி சத்தமின்றி இனவாதிகளின் கோரிக்கைகளை மிக லாபகமாக நிறைவேற்றி வருகின்ற ஜனாதிபதி மைத்திரி அவர்கள்.
முன்பு ஒரு தடவை தமிழ் மக்களின் மாட்டுப்பொங்கள் தினத்தன்று மாடறுப்பை தடைசெய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதே நேரம் நானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்ற கருத்தையும் அங்கே பதிவும் செய்திருந்தார்.

அந்தக் கருத்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அப்படியே கிடப்பில் போட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரி அவர்கள்.

ஆனால் இன்று ஜனாதிபதி அவர்கள் பின்கதவால் அந்த தடையை நிறைவேற்ற முற்பட்டுள்ளார், அதன் முன்னோடியாகத்தான் மாடுகளை வாகனங்களில் வேறு இடத்துக்கு கொண்டுசெல்லுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட விடயமாகும்.

இதே போன்றுதான் இனவாதிகளின் நீண்டநாள் கோரிக்கையான வில்பத்து வனாந்திர பகுதியை பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கையாகும், இதனைக்கூட ஜனாதிபதி அவர்கள் ரத்தமின்றி சத்தமின்றி நிறைவேற்றிக் கொடுத்து விட்டார்.

அதே போன்றுதான் மாயக்கல்லில் சிலைவைக்கும் இனவாதிகளின் நீண்டநாள் கோரிக்கையும் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த விடயமாகும்.

அதற்காக ஆ ஊ என்று கத்திய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பெட்டிப்பாம்பாக அடங்கிக்கொண்டார்கள். இப்போது அதனையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு, ஜனாதிபதியுடன் ஜாலியாக வெளிநாட்டு பிரயாணங்களில் மூழ்கி விட்டார்கள் நமது உரிமைகளை மீட்கவந்த உத்தமர்கள். இதுதான் நமது முஸ்லிம் மக்களின் தலைவிதியுமாகி விட்டது.

இதே தடைச் சட்டத்தை மஹிந்த அரசாங்கம் கொண்டுவந்திருந்தால் இன்று ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியிருப்பார்கள், நமது அரசியல் நாடக நடிகர்கள்.
இந்த நிலைமை இப்படியே நீடிக்குமாக இருந்தால் சிறுபாண்மை மக்களின் பல உரிமைகள் சர்வசாதாரணமாக பறிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இதற்கெல்லாம் காரணம் எதிர்க்கட்சி வரிசையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாததுதான், அப்படி நாளுபேர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் சுதந்திரமான முறையில் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட்டிருப்பார்கள், அதனால் நமது சமூகத்துக்கு நடக்கும் அநியாயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கும் அது ஏதுவாக இருந்திருக்கும்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் அனைவரும் பதவி பட்டங்களுக்காக ஆளும்கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பதனால், அவர்கள் செய்யும் அநியாயங்களை தட்டிக்கேட்பதற்கு தற்போதைக்கு அவர்கள் தயாரில்லை.

ஆகவே, நமது அரசியல்வாதிகள் இன்று வாயடைத்து போயிருப்பதற்கு இதுதான் காரணம் என்பதை நமது சமூகம் தெறிந்துகொள்ள முயற்சிக்காதவரைக்கும், இனவாதிகளின் காட்டில் மழைதான் என்பதே உண்மையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -