அதேசமயம் மேற்படி குழந்தைகள் காலொன்றை தம்மிடையே பங்கீடு செய்துள்ளன. இந்நிலையில் இந்த இரட்டைக் குழந்தைகளின் சிக்கலான உடல் நிலை காரணமாக அந்தக் குழந்தைகளை வேறாகப் பிரிப்பதற்கு காஸாவில் போதிய மருத்துவ வசதியோ, மருத்துவத் தொழில்நுட்பமோ இல்லாததால் அந்தக் குழந்தைகளை அமெரிக்கா, சவூதி அரேபியா அல்லது இஸ்ரேலுக்கு அனுப்பி சிகிச்சையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் முக்கிய உடல் உறுப்புகளை தம்மிடையே பங்கீடு செய்யாததால் அவற்றின் உடல் நலம் ஸ்திரத்தன்மையில் உள்ளதாக காஸாவிலுள்ள ஷிபா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ கலாநிதி அபு ஹம்டா தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் காஸாவில் உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மரணத்தைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(வீ)