அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இரவு நேரத்தில் கழிவுகளை தீ வைப்போர் இனம் காணப்பட்டுள்ளதாக அட்டன் டிக்கோயா நகரசபை செயலாளர் எஸ் பிரயதர்சினி தெரிவித்தார்
அன்மைக்காலமாக அட்டன் பஸ்தரிப்பிடத்தில் கழிவுகளை இரவு நேரங்களில் தீ வைப்பதாக நகரபைக்கு பல்வேறு முறைபாடுகள் கிடைக்பெற்ற நிலையில் நகரசபை ஊழியர்களை இரவு நேரங்களில்கண்கானிக்கும்படி உத்ரதவிட்ட நிலையிலே 23.10.2017 இரவு கழிவுகளுக்கு தீ வைப்போர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
குறித்த நபர்களை கைபேசியினூடாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.