தலவாக்கலை பி.கேதீஸ்-
மலையக இளைஞர்கள் பலரும் அரசியல்வாதிகளான எம்மிடம் தங்களது மைதானத்தை புனரமைத்து தருமாறு வேண்டுகோள்விடுக்கின்றனர். நாமும் இயலுமான வரை அதனை மேற்கொண்டு வருகின்றோம். விளையாட்டுததுறையில் ஆர்வம் காட்டுவது அவசியம். அதேபோல அரசியல் செயற்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
எதிரவரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களத்தை தமக்கானதாக பயன்படுத்திக்கொள்ள மலையக இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
ராகலை மாகுடுகல தோட்டத்தில் புனரமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை விளையாட்டு கழகத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு (13-10-2017) இடம்பெற்றது. வலப்பனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்தியமாகாண சபை உறுப்பினர் திருமதி.சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கரப்பந்தாட்ட போட்டித் தொடரையும் ஆரம்பித்துவைத்தனர். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் வெகுவிரைவில் நடைபெற ஏற்பாடாகி வருகின்றது. தேர்தல் காலங்களில் பல்வேறு நிறங்களில் கட்சிகள் களமிறங்கும். தேர்தல் அல்லாத காலங்களில் யார் மக்களிடத்தில் வருகிறார்கள் என்பதை மனதில் இறுத்தி மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கலப்பு முறை எனும் புதிய முறையில் நடைபெறவுள்ளது. நீங்கள் வாழும் பிரதேசங்கள் வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்களது வட்டாரத்தில் இருந்து ஒருவரை நீங்கள் உறுப்பினராக தெரிவு செய்துகொள்ள முடியும். உங்களது வட்டாரத்தில் போட்டியிடுபவர் யார் என்பதை கட்சித் தலைமைகள் தீர்மானித்து முன்னிறுத்துவார்கள்.

அவருக்கு வாக்களித்து உங்கள் வட்டாரத்தின் உறுப்பினரை உறுதிப்படுத்திக்கொள்வது வட்டாரத்தில் வாழும் ஒவ்வொரு வாக்காளரினதும் பொறுப்பும் கடமையுமாகும். முன்புபோல மனாப்ப எனும் விருப்ப தெரிவு இல்லை. எனவே உங்கள் ஊரைச் சேராதவர் ஒருவருக்கு நீங்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை. உங்களில் ஒருவரை வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவரைத் தெரிவு செய்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பாகும்.
பிரதேச சபைகளின் நிதியினை பெருந்தோட்டப்பகுதிகளில் கையாள முடியாது எனும் நிலையை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். அதற்கான சட்டத்திருத்த ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. விரைவில் பாராளுமன்றில் அது நிறைவேறும். அதேபோல நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளை அதிகரிக்கவும் நாம் கோரிக்கை வைத்துள்ளோம்.
பிரதேச சபை தேர்தலுக்கு முன்பதாக அதனையும் அமுல்படுத்த நாம் அழுத்தங்களைக்கொடுத்து வருகின்றோம். எனவே எமக்கு வாக்களித்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் நாம் பாராளுமன்றத்தினை பயன்படுத்தி வருகின்றோம். அதன் பயனாக கிடைக்கக் கூடிய பிரதேச மட்ட வாய்ப்புகளை மலையக இளைஞர் யுவதிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டுவதுபோல தேர்தல் காலத்தில் விளையாட்டுக்காட்ட வருபவர்களிடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாக்கின் பெறுமதி உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.