திருமதி சுபாஷினி பிரணவனின் " குமுறல்'' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கடந்த 14ந்திகதி மாலை 4.00 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக மேல்மாகாண உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி பொதுச் செயலாளரும் பொறியியலாளருமான திரு சண். குகவரதன் அவர்களும், சிறப்பதிதியாக எழுத்தாளரும் கொழும்புத் தமிழ்ச் சங்க உபதலைவருமான திரு இரகுபதி பாலஸ்ரீதரன் அவர்களும் கலந்துகொண்டார்கள்
நூலின் முதற்பிரதியை இலக்கியப்புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் ஒமர் பெற்றுக் கொண்டார்.
வரவேற்புரையைக் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி துஷ்யந்தி சஞ்சயன் நிகழ்த்துவார். நூலுக்கான அறிமுகத்தை எழுத்தாளர் கீதா கணேஷ் முன் வைப்பார். நூலுக்கான ஆய்வுரையையும் விமர்ச உரையையும் முறையே திருமதி வசந்தி தயாபரன், மேமன்கவி, ஆகியோர் நிகழ்த்தினார்கள். கவி வாழ்த்தினை வகவத் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் நிகழ்த்த ஏற்புரையை நூலாசிரியை திருமதி சுபாஷினி பிரணவன் நிகழ்த்த்தினார்.
, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்கினார்கள்.