ஊடக பிரிவு-
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்திஉத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது நாட்டிற்கு தேவை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள்முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஆகவே ஒருமித்த நாடா என்ற ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்திற்கு அப்பால்சென்று தற்போது தமக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா அனைத்து இனங்களுக்கும் சம்ம்மான அங்கீகாரம்வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்குசமூகம் முன்வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
தற்போது உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் குறித்துவினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் கிழக்கு முதலமைச்சர்,
தற்போது சில அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ளஒருமித்த நாடு என்ற பத்த்தை முன்வைத்து இன்று பாரிய குழப்பங்களை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்.
இதனூடாக பெரும்பான்மை மக்களை குழப்பி உத்தேச அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்புமுன்னெடுக்கப்படுமாயின் அதனை தோற்கடித்து நாட்டில் தொடர்ச்சியாக சிறுபான்மையினருக்கும்பெரும்பான்மையினருக்குமான பிரச்சினைகளை நீடிக்கச்செய்து அதில் தமது அரசியலைதக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு சில குழுக்கள் முயற்சித்துக்கொண்டுள்ளன.
அத்துடன் இவர்களுடன் இணைந்து சில சிறுபான்மையின அரசியல்வாதிகளும் அரசியலமைப்பில்தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பில் கூறப்படாத வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை கூறி மக்களுக்கு இடையே வீணாண பிரச்சினைகளை உருவாக்கிசிறுபான்மையினருக்கு தீர்வு கிடைப்பதை விரும்பாத பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு துணைபுரிந்து வருகின்றனர்.
ஆகவே சிறுபான்மையின சமூகம் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள பெரும்பான்மையின இனவாதிகளைப்போல் சிறுபான்மையின புல்லுருவிகளிடமும் நாம் போராடவேண்டியுள்ளது.
ஆகவே சிறுபான்மை சமூகம் இந்த ஒருமித்த என்ற பத்த்திற்குள் முஸ்லிம் சமூகத்தின் சுய கௌரவத்துடனானஇருப்பு குறித்தகேள்விகள் இருக்கின்றன,புதிய அரசியல் யாப்பு வரையப்பட முன்னர் அது குறித்த விடயங்களை நாம் தமிழ் தலைமைகளுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்குள் வரவேண்டிய தேவையும் இருக்கின்றது.
மாகாணங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதுடன் ஆளுனர் தெரிவில் குறித்தமாகாண மக்களுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும் உள்ளடக்கப்படவேண்டும்.
அத்துடன் தேர்தல் முறை சீர்த்திருங்களிலும் முஸ்லிங்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் குறித்து கூடுதல்கரிசனைசெலுத்தப்படவேண்டியுள்ளது.
தற்போது சிறுபான்மை சமூகங்களின் தமது மத மற்றும் தமது கலாசாரங்களை பின்பற்றுவதற்கானஉரிமைகள்தொடர்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பதுடன் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வித்த்தில் செயற்படுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படவேண்டும்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரசியமைப்புதொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மிக ஆளுமையுடன் பொறுப்புணர்வுடனும் தெளிவுபடுத்தி வருகின்றார்.
ஆகவே எமது சமூகம் தேவையற்ற பீதிகளை ஏற்படுத்துவோரின் கருத்துக்களுக்குள் முடங்கியிராமல் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை குறித்து தெளிவான கருத்தாடல்களை ஏற்படுத்தி அது குறித்த விவாதங்களை முன்னெடுத்து சிறுபான்மை சமூகத்துக்கான சாதக பாதகங்கள் குறித்து தெளிவாக ஆராயமுன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.